வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ஊத்துக்கோட்டை: பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பூண்டி ஒன்றியம், பெரிஞ்சேரி கிராமத்தில் கிராம மக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டது சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பெருமாள் கோவில். பணிகள் முடிந்து, நேற்று காலை, கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை , 8:00 மணிக்கு அனுக்ஞை, விஸ்வக்சேன ஆராதனம், புன்யா ஹவாசம், மகா சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை , இஷ்ட தேவைதைகள் பூஜை . பூர்ணா ஹூதி தீபாராதனை, காப்பு கட்டுதல் சுவாமி கரிவலம் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 5:00 ம ணிக்கு வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜை, பரிவார கும்பங்கள் ஆவாஹனம், ஊஞ்சல் சேவை ,சாத்துமறை, சுவாமி சயனாதி வாசம், சதுஸ்தான அர்ச்சனை, ஹோமம் ஆகிய நிகழ்ச் சிகளும் நடந்தன. நேற்று, காலை , 5:00 சுப்ரபாத சேவைத்வார அர்ச்சனம், 2ம்கால யாக பூஜை , சதுஸ்தான அர்ச்சனை, சாந்தி ஹோமம், பிராய சித்த ஹோமம் , மகாசங்கல்பம், சித்ரா படஆவாஹனம், சுவாமிக்கு நாமகரணம், ஆலய சமஸ்காரம், காலை 9:00 மணிக்கு சத்யபாமா ருக்மணி சமேதவேணுகோபால பெருமாளுக்கு, மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. மதியம், 1:00 ம ணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 ம ணிக்கு, உற்சவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, 3ம் தேதி, காலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், ஆண்டாள் திருப்பாவை பாராயணம், ஹனுமன் சாலிசா பஜனை நடை பெற உள்ளது.