உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி

ராமநாதீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் 100வது மாத முற்றோதல் நடைபெற்றது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நடைபெற்றது. காலை6:30 மணிக்கு திருவாடுதுறை ஆதீன கவுரவ ஊழியர் விஜயகுமார் இடபக்கொடி ஏற்றினார். பின்னர் ராமநாதீஸ்வரர் பஞ்ச வாத்தியக் குழு இசையுடன், சிவனடியார்களின்,பன்னிரு திருமுறை மற்றும் மாணிக்கவாசகர் உருவச் சிலை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, ராமநாதீஸ்வரர்கோவிலில் நுாறாவது மாத திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இதில், நெய்வேலி, புதுச்சேரி, விழுப்புரம், நுங்கம்பாக்கம் அடியார் திருக்கூட்டத்தினர் கலந்துகொண்டனர். முற்றோதலில், கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியிலிருந்து நுாற்றுக்கு மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டனர். சிவனடியார்கள் சேதுபதி,கபிலன் உட்பட பலர் பாடல்களைப் பாடினர். ஏற்பாடுகளை தமிழ் வழிபாட்டுச் சபை,பஞ்சவத்தாயக்குழு,திருமுறை திருத்தலக்குழு, திருவாச முற்றோதல் குழு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !