உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமேனிநாதர் கோயில் பங்குனி பிரமோற்சவம்

திருமேனிநாதர் கோயில் பங்குனி பிரமோற்சவம்

திருச்சுழி: திருச்சுழியில், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட, துணைமாலை நாயகி சமேத திருமேனிநாதர் கோயில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், சுவாமி தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். எட்டாம் நாள் விழாவாக, திருக்கல்யாணம் நடைபெறும். சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வர். ஒன்பதாம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படியாரின் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !