திருப்புத்துார் வடிவேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3148 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் புதுப்பட்டி சீனி விநாயகர், ஊர்காவலன் சுவாமி, வடிவேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி மார்ச் 31ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று முன்தினம் வாஸ்துசாந்தி, முதலாம் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 2 ம் யாகசாலை பூஜையும், தொடர்ந்து 9:00 மணிக்கு சீனிவிநாயகர், வடிவேல் முருகன் கோயில் கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து ஊர்க்காவலன் சுவாமி, பெரியகண்மாய் கலுங்கு அருகே ஆற்றங்கரை ஊர்க்காவலன் பீடத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிராமத்தினர் ஏற்பாட்டை செய்தனர்.