பெரிய சுவாமி கோயில் 93ம் ஆண்டு குருபூஜை விழா
ADDED :3148 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் சிதம்பர சுவாமி என்ற பெரிய சுவாமி கோயில் 93ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிவகாமி அம்மன் சமேத நடராஜர் ஆலய செங்குந்தர் மகளிர் மன்றத்தினரின் பஜனை விழா, திருவிளக்கு பூஜை, மகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெற்றது.