மாரியம்மன் கோவில் திருவிழா:
மாரியம்மன் கோவில் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ப.வேலூர்: ப.வேலூர், மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ப.வேலூர் மாரியம்மன் கோவிலில், தேர்த் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா, மார்ச், 19ல் துவங்கியது. நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தன. நேற்று காலை, தேரை வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு, 8:00 மணியளவில் தேர் நிலை வந்து சேர்ந்தது. பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக கோழி, வாத்து, கொழுக்கட்டை, பூக்கள் உள்ளிட்டவற்றை தேரின் மீது வீசினர். இன்று பொங்கலிட்டு, மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதல், வரும், 7ல் மஞ்சள் நீராடல் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.