உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநவமி மஹோற்சவ விழா:

ராமநவமி மஹோற்சவ விழா:

ராமநவமி மஹோற்சவ விழா: இன்று நாமக்கல்லில் துவக்கம்
நாமக்கல்: நாமக்கல், கடைவீதி வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில், ராமநவமி மஹோற்சவ விழா, இன்று (ஏப்., 5) துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இன்று காலை, 8:00 மணிக்கு, அபிஷேகம், சங்கல்பம், அலங்காரம், அர்ச்சனை, கும்ப ஸ்தாபனம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, காமதேனு வாகனத்தில், ராமச்சந்திர மூர்த்தி எழுந்தருளுகிறார். இரவு, 8:00 மணிக்கு, மந்திர புஷ்பம், தீபாராதனை, பிரசாத வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை காலை, 8:00 மணிக்கு, அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு, யானை வாகனத்தில் அயோத்தி ராமன் எழுந்தருளல், இரவு, 8:00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. வரும், 7 காலை, 8:00 மணிக்கு அபிஷேகம், காலை, 10:00 மணிக்கு, மாப்பிள்ளை வீட்டார் அழைப்பு, சீர் தட்டம் கொண்டு வருதல், எதிர் சேவை, மாங்கல்ய தாரண சீதா ராம கல்யாண உற்சவம், பகல், 1:00 மணிக்கு, ஆர்ய வைஸ்ய சமாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !