உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தியூர் சின்னமாரியம்மன் கோவில் திருவிழா

சந்தியூர் சின்னமாரியம்மன் கோவில் திருவிழா

அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பனமரத்துப்பட்டி: சந்தியூர் சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவில், அக்னி குண்டம் இறங்கி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மல்லூர் அருகே, சந்தியூர் சின்னமாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று, அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:00 மணியளவில் சந்தியூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து, பக்தர்கள் பூங்கரகம் ஏந்தி புறப்பட்டனர். தொடர்ந்து, கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அக்னி கரகம் ஏந்தியபடி, பக்தர்கள் ஆடி வந்தனர். இன்று, பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் ஆகியவை நடக்கிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !