பொன் காளியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்
ADDED :3114 days ago
கொடுமுடி: பொன்காளியம்மன் கோவிலில், பொங்கல் விழாவையொட்டி, அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். சிவகிரி அருகே, தலையநல்லூரில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. ஏழாவது நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் காவிரி தீர்த்தம், அலகு குத்தி, கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று பொங்கல் வைபவம் (5ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி குதிரை துளுக்குப் பிடித்தல், பந்தம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.கோவிலில் பொங்கல் விழா நடந்து வருகிறது. நாளை இரவு, 10:00 மணிக்கு, வண்ணாரக்கருப்பண்ணசாமி பொங்கல் விழா நடக்கிறது. மறுநாள் (7ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.