உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டல் நடயேட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

திண்டல் நடயேட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

திண்டல் நடயேட்டி மாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் விழா

ஈரோடு: ஈரோடு, திண்டல் பெரியார் காலனியில், சக்தி நடயேட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஏழாம் ஆண்டு பொங்கல் திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காவிரி புனித தீர்த்தம் சுமந்து, நேற்று ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாலை, 3:00 மணிக்கு பூச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. இரவு, 12:00 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !