உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா:

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா:

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றம்
சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அடுத்த, பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் தீ மிதிக்கும் நிகழ்ச்சி, வரும், 10, 11ல் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவர். இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக, வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, அந்தியூர், பவானி, கோபி பகுதிகளில் இருந்து வருவோர் சத்தி, பண்ணாரி சாலையில் உள்ள புதுக்குய்யனூர் பிரிவு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டிலும், கோவை, திருப்பூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பவானிசாகர், பண்ணாரி ரோட்டில் உள்ள ராஜன்நகர் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து கோவிலுக்கு வருவதற்கு அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராஜன் நகரிலிருந்து பண்ணாரி வரையிலும், புதுக்குய்யனூர் பிரிவிலிருந்து பண்ணாரி வரையிலும், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மேலும், திம்பம் மலைப்பாதையில், 10ம் தேதி மதியம் முதல், 11ம் தேதி மாலை, 4:00 மணி வரை, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பால், காய்கறி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !