உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் தேரோட்டம் கோலாகலம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் தேரோட்டம் கோலாகலம்

காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், தேர் திருவிழா நேற்று, வெகு விமரிசையாக நடைபெற்றது. வாத்திய கருவிகள் முழங்க, உற்சவர் மற்றும் அம்மன், மக்கள் திரளில் பவனி வந்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் வெள்ளித்தேரில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வீதியுலா வந்தனர். இந்த விழா நடந்தேறிய சமயத்தில், கச்சபேஸ்வரர் கோவில் முன், வாண வெடிகள் வெடித்து, இடமே கோலாகலமாக மாறியது. ஆயிரக்ககணக்கான பக்தர்கள், வாண வேடிக்கையை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.

இதையடுத்து, ஏழாம் நாள் முக்கிய உற்சவமான நேற்று, தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காலை, 5:30 மணிக்கு, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி தேரில் எழுந்தருளினர். 8:15க்கு, நிலையில் இருந்த புறப்பட்ட தேரை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த விழாவிற்காக வெளி மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற, 45 சிவன் பக்தர்கள், மங்கள் வாத்தியங்களை இசைத்தபடியும், கோலாட்டம் ஆடியபடியும் தேர்முன் சென்றனர். நான்கு ராஜவீதிகளிலும் பவனி வந்த தேர், மதியம், 1:45க்கு கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து, இரவு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை, ஆறுமுகப் பெருமான் எடுப்பு ரத காட்சியில் அருள்பாலிப்பார். இரவு, குதிரை வாகனத்தில் எழுந்தருளும் ஏகாம்பரநாதர், ராஜவீதிகளில் பவனி வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !