பழநி பங்குனி உத்திர விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3205 days ago
பழநி: பழநி பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு, திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றம் நடந்தது. ஏப்.,3 முதல் ஏப்.,12 வரை பத்து நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில், சித்தனாதன் அன் சன்ஸ் பழனிவேலு, செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், திருப்பூர் லாட்ஜ் மகேஷ் நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.