அதிகார நந்தியில் பொன்னேரி அகத்தீஸ்வரர் உலா
ADDED :3312 days ago
பொன்னேரி: பங்குனி பிரம்மோற்சவ விழாவில், அகத்தீஸ்வர பெருமான், அதிகார நந்தியில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னேரி, ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், கடந்த மார்ச் 31ம் தேதி முதல், பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், மூன்றாம் நாள் உற்சவமான, அதிகார நந்தி கோபுர தரிசனம் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அதிகார நந்தி வாகனத்தில் அகத்தீஸ்வரர் பெருமான், உற்சவ மூர்த்திகளுடன் மாடவீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அகத்தீஸ்வர பெருமானை வழிபட்டு சென்றனர்.