பெரியபட்டணம் தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம்!
ADDED :5131 days ago
கீழக்கரை:பெரியபட்டணம் மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா 110ம் ஆண்டின் சந்தனக்கூடு விழா நேற்று துவங்கியது. பேஷ் இமாம் ஜாபர் அலி துவாவிற்கு பின் அங்குள்ள 100 அடி கொடி மரத்தில் தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றம் நடந்தது. தர்கா மண்டபத்தில் நாள்தோறும் மௌலீது ஒதப்பட்டு நேர்ச்சிகள் வழங்கப்படும். நவ.,13 ல் சந்தனக்கூடு விழா நடக்கிறது. அனைத்து சமூக மக்கள் பங்கேற்பதால் மத நல்லிணக்க விழாவாக நடத்தப்படுகிறது. கமிட்டி தலைவர் செய்யது இபுறாம்சா, ஹாஜா நஜ்முதீன், ஊராட்சி தலைவர் எம்,எஸ்.கபீர், கமிட்டி செயலாளர் அப்துல் மஜீது மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுல்த்தானிய சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.