உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாச்சியார்கோயிலில் கண்கொள்ளகாட்சியாக நடந்த கல்கருட சேவை

நாச்சியார்கோயிலில் கண்கொள்ளகாட்சியாக நடந்த கல்கருட சேவை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, கல் கருட சேவை நடைபெற்றது.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு, சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாக  விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலாகும். 108 திவ்ய தேசங்களில், 20வது தலமாகும்.இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி பெருவிழாவில், முக்கிய நிகழ்வாக, நேற்று மாலை, கல் கருட சேவை நடைபெற்றது. அப்போது, கல் கருட வாகனத்தில் பெருமாளை  சன்னிதியிலிருந்து முதலில் இருவர் துாக்குவர். தொடர்ந்து நான்கு பேர், பின், 16 பேர், 32 பேர், 64 பேர் என கூடிக்கொண்டே செல்லும். அந்த அளவுக்கு கருட வாகனத்தின் எடையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். சன்னிதியிலிருந்து வெளியே வரும் பெருமாளை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். வரும், 11ல் திருத் தேரோட்டமும், தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !