பழநி பங்குனி உத்திர திருவிழா: நாளை திருக்கல்யாணம்
ADDED :3143 days ago
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக நாளை (ஏப்.,8ல்) திருக்கல்யாணமும், ஏப்.,9ல் தேரோட்டமும் நடக்கிறது. திருஆவினன்குடி கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை மறுநாள் மாலை 4.20 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவில் முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் உலா வருவார். பங்குனி உத்திர நாளில் ௨ ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.