பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் தேரோட்டம்
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம், காமாட்சி அம்மன் உடனாய சோளீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. பேரம்பாக்கம், காமாட்சி அம்மன் உடனாய சோளீஸ்வரர், கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை, 8:00 மணிக்கு, சுவாமி தேரில் எழுந்தருளினார். பின், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகளில் வலம் வந்து, பின் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தில் பேரம்பாக்கம், நரசிங்கபுரம், சிற்றம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை, திருக்கல்யாண உற்சவமும், நாளை இரவு, நடராஜர் உற்சவமும் நடைபெறும். ஏப்., 9ம் தேதி, மாலை கொடியிறக்கமும், 10ம் தேதி, திருஊடல் உற்சவமும் நடைபெறும்.