ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் ராமநவமி பாராயணம்
ADDED :3144 days ago
ராமநாதபுரம், ராமநவமியை முன்னிட்டு குயவன்குடி ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் இரண்டு நாள் பாராயணம் நடந்தது. ஏப்., 5 காலை ஆரத்தியுடன் விழா துவங்கியது. இதையடுத்து, அபிஷேகம், ஆராதனைக்கு பின் காலை 9:00 மணிக்கு அகண்ட பாராயணம் துவங்கியது. மாலை 4:00 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, மாலை 6:00 மணி, இரவு 8:30 மணி ஆரத்தி நடந்தது. நேற்று(ஏப்., 6) காலை ஆரத்தி, 8:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏப்., 5 காலை 9:00 மணிக்கு துவங்கிய அகண்ட பாராயணம் நேற்று (ஏப்.,) காலை 9:00 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 4:00 மணிக்கு கூட்டுபிரார்த்தனை, மாலை 6:00, இரவு 8:30 ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது. இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஷீர்டி சாய் ஆச்சார்யா தியான் மந்திர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.