முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா
ADDED :3145 days ago
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த பூக்குழிவிழாவில் பக்தர்கள் பரவசத்துடன் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் விழாவாக பக்தர்கள் அக்னி சட்டி, முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று அதிகாலையில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை எஸ்.பி.கே., கல்வி குழும தலைவர் சுதாகர் தலைமையில் விழாக் குழுவினர் செய்தனர்.