உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கல தேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா

மங்கல தேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா

மங்கல தேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு திருவிழாஆலோசனை கூட்டம்

தேனி, தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்கல தேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம், தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மே 10ல் இவ் விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்வது, சோதனை சாவடி அமைப்பது, வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது, இருமாநில போலீசார் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது, அதிக சத்தம் உண்டாக்கும் ஒலிபெருக்கி, ஜெனரேட்டர், பட்டாசு வெடிப்பதற்கும், எந்த மொழியிலும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரங்கள் செய்ய கூடாது என முடிவெடுக்கப்பட்டது. பக்தர்கள் கோயில் பகுதிக்குள்ளோ, வனப்பகுதிக்குள்ளோ முடி காணிக்கை செலுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., பொன்னம்மாள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், மேகமலை வன உயிரின காப்பாளர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !