உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் நாளை தேரோட்டம்

பெரியகுளத்தில் நாளை தேரோட்டம்

பெரியகுளம், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர் திருவிழா மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் முருகன், வள்ளி- தெய்வானை, சிவன், அறம்வளர்த்த நாயகி, நந்தி வீதியுலா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளைமாலை நடக்கிறது. திருப்பணிக்குழு நிர்வாகத்தினர் நேற்று தேர் நிறுத்தப்பட்ட கதவுகளை திறந்தனர். தேரினை சுத்தம் செய்து, சுற்றி தொம்பைகள் தொங்கவிடும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !