உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாத்தூர் கோவிலில் இன்று பவித்ரோத்சவம்

நல்லாத்தூர் கோவிலில் இன்று பவித்ரோத்சவம்

புதுச்சேரி : நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் 13ம் ஆண்டு பவித்ர உற்சவ விழா இன்று துவங்குகிறது. நல்லாத்தூர் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் 13ம் ஆண்டு பவித்ர உற்சவ விழா, இன்று (4ம் தேதி) மாலை 6 மணிக்கு பவித்ர பிரதிஷ்டையுடன் துவங்குகிறது. நாளை (5ம் தேதி) காலை 7 மணிக்கு பவித்ர சமர்ப்பணம், மாலை 6 மணிக்கு ஹோமம், 6ம் தேதி காலை 9 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை 7 மணிக்கு சன்னதி புறப்பாடு ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை அறங்காவலர் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !