உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை

கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை

கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், ஈஸ்டர் பண்டிகையொட்டி, குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர், வரும், 16ல்  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு பிரார்த்னை
நடந்தது. கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை , சூளகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், பர்கூர் ஆகிய பகுதிகளில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக, கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி, பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில், பங்கு தந்தை தேவசகாயம் தலைமையில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி, நற்கருணை மற்றும் பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் நடந்த
குருத்தோலை ஞாயிறு விழாவில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !