உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திர விழா:

பங்குனி உத்திர விழா:

பாகூர்: சேலியமேடு பாலமுருகன் சுவாமி கோவிலில், பங்குனி  உத்திர திருவிழா நடந்தது. பாகூர் அடுத்துள்ள சேலியமேடு சின்னபேட்டில், பாலமுருகன் சுவாமி கோவிலில் 7ம் ஆண்டு
பங்குனி உத்திர திருவிழா கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம்12.00 மணிக்கு, சேலியமேடு குளக்கரையில் காவடிகளை அலங்கரித்து, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !