உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் இன்று துவக்கம்

பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் இன்று துவக்கம்

சென்னை:கீழ்கட்டளை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவா விழா, இன்று துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது.இந்த ஆண்டு, பிரம் மோற்சவா விழா, இன்று மாலை விஷ்வக்சேனர் புறப்பாட்டுடன் துவங்குகிறது. 12 முதல், 21ம் தேதி வரை, காலை மாலையும், பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். 16ம் தேதி காலை, பெருமாள், நாச்சியார்
திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 18ம் தேதி காலை நடக்கிறது. 21ம் தேதி காலை அன்னகூடை உற்சவம் நடக்கிறது. மாலையில், புஷ்ப
பல்லக்கில் பெருமாள் பவனி வருவதுடன், விழா நிறைவு  பெறுகிறது.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண  மண்டலியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !