உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

மலைக் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வர்  மலைக்கோவிலில், பவுர்ணமி பூஜை சிறப்பாக நடந்தது.  குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள்,  கையில் பத்தியை ஏந்தியவாறு, நான்கு கிலோ மீட்டர் தூரம்  கொண்ட மலையை சுற்றி வந்தனர். மேலும், பக்தர்கள் மலையில் உள்ள, 1,017 படிகளில் ஏற்றி சுவாமியை தரிசித்து வந்தனர். இதேபோல், சின்னரெட்டியபட்டியில், 300 அடி உயரத்தில், 2.60 கி.மீ., சுற்றளவு கொண்ட பாறையாலான குன்னுடையார் மலை உள்ளது. இந்த மலை உச்சியில், ஆவுடையநாயகி உடனான ஆவுடையலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமி பூஜை முன்னிட்டு, கிரிவலம் நடந்தது. இதேபோல், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மலைக்கோவில்களில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !