பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3104 days ago
ஏமூர்: தான்தோன்றிமலை அடுத்த ஏமூர் புதூரில் செல்வவிநாயகர், பகவதியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமம், கிராம தேவதை வழிபாட்டைத் தொடர்ந்து காவிரி, அமராவதி ஆற்றில் ஊற்றுத் தோண்டப்பட்டு, அதிலிருந்து கிடைத்த நீரை மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக புனிதநீராக பக்தர்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து, பசுபதீஸ்வரர் கோவில் குருக்கள் தட்சிணாமூர்த்தி, கோவில் கலசத்தின் மீது
புனிதநீர் ஊற்றி செல்வவிநாயகர், பகவதியம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.