உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி பங்குனி உத்திர விழா

சின்னாளபட்டி பங்குனி உத்திர விழா

சின்னாளபட்டி;பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி  சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி, சதுர்முக முருகனுக்கு பால், இளநீர்,  தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது.சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், கன்னிவாடி  சோமலிங்கசுவாமி கோயில், தோணிமலைமுருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி  கோயில், குட்டத்துப்பட்டி ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !