கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
காளையார்கோவில்: கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்கோயில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன்கோயில் பங்குனி சுவாதி திருவிழா ஏப் 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். நேற்று காலை 4:30 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. 5:00 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். 8:50 மணிக்கு பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. பெண்கள் அம்மன் தேரை இழுத்து வந்தனர். காலை 9:10 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், பறவைக்காவடி, பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெற உள்ளது. இணைஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.