உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சீரகாபாடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார சிறப்பு யாகம்

சேலம் சீரகாபாடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார சிறப்பு யாகம்

சீரகாபாடி: சேலம், சின்னசீரகாபாடி சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று எதிரிகளை வெல்லவும், திருமண தடை நீங்கவும், சத்ரு சம்ஹார சிறப்பு யாகம் நடந்தது. சின்னசீரகாபாடி, சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஸ்ரீ விஷ்ணுபதி வழிபாட்டுக்குழு மற்றும் ஊர் மக்கள் சார்பில், உலக நன்மைக்காகவும், எதிரிகளை வெல்லவும், திருமண தடைகள் விலகவும் வேண்டி சிறப்பு சத்ரு சம்ஹார யாகம் நேற்று நடந்தது. யாகத்தையொட்டி, காலை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா சங்கல்பம் செய்யப்பட்டது. 10:00 மணிக்கு சுப்பிரமணியர் சத்ரு சம்ஹார யாகம் துவங்கியது. மதியம், 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை முடிந்து மூலவர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டது. எதிரிகளை வெல்லவும், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண் திருஷ்டி, தொழில் தடைகள், குடும்ப ஒற்றுமை, திருமண தடை விலகவும் வேண்டி, சத்ரு சம்ஹார யாகம் செய்யப்பட்டது. சீரகாபாடி, அரியானூர், வீரபாண்டி, ராக்கிப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !