சின்னாளப்பட்டி ஆஞ்சநேயருக்கு 10,008 பழக்காப்பு அலங்காரம்
ADDED :3214 days ago
திண்டுக்கல்: சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டி, அஞ்சலி வரத விஸ்வரூப ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர், வரப்பிரசாதி. இவருக்கு நாளை(14ம் தேதி) வெள்ளிக்கிழமை சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும் 10,008 பழக்காப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் இக்கனிக்காப்பு அலங்காரத்தில் பங்குகொண்டு ஆஞ்சநேயரின் மனதை கனியச் செய்யவும், எடுத்த காரியங்கள் ஜெயம் உண்டாகவும் பழக்காப்பில் பங்கு பெறலாம் என வி.ஆர். சுந்தரராஜ பட்டாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு: செல் 9443226861