உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி கல்யாண முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி கல்யாண முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, கல்யாண முருகன் கோவிலில்,  முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பர்கூர் அடுத்த  சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முருகன் கோவிலில்,
64ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, கடந்த, 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு, 8:00 மணிக்கு வன்னியன் பிறப்பு நாடகமும், 10 இரவு, 9:00 மணிக்கு நைய்யாண்டி மேளம் நிகழ்ச்சியும் நடந்தது. 11ல், அர்ஜுனன் தபசு  நாடகமும், பின், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டமும் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, வாண வேடிக்கை நடந்தது. இதைத்  தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு, முருகனுக்கு  திருக்கல்யாணம் நடந்தது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !