உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அம்மையார் ஐக்கியப்பெருவிழாவை முன்னிட்டு இசை ஆராதனை

காரைக்கால் அம்மையார் ஐக்கியப்பெருவிழாவை முன்னிட்டு இசை ஆராதனை

காரைக்கால்: காரைக்கால் அம்மையாரின் ஐக்கியப்பெருவிழாவை முன்னிட்டு இசை ஆராதனை விழா நடந்தது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்ரீகைலாசநாதர், நித்திய கல்யாண பெருமாள் தேவஸ்தானம் இணைந்து நடத்தும் காரைக்கால் அம்மையார் ஐக்கியப் பெருவிழா அம்மையார் மணி மண்டபத்தில் நடந்தது.

தொகுதி எம்.எல்.ஏ.,அசனா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.புதுச்சேரி மின்திறல் குழுமம் தலைவர் கீதாஆனந்தன்,எம்.எல்,ஏ.,சந்திரபிரியங்கா,கலெக்டர் பார்த்திபன்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காரைக்கால் அம்மையார் வரலாறு. அறுபத்து மூன்று நாயன்மார்களில் காலத்தால் மூத்த பெண்பாற்புலவர் காரைக்கால் அம்மையார் இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து ஈசனால் அம்மையே என்று அழைக்கப் பெற்றவர்.இறைவனுடைய திருவடி நிழலில் அமர்ந்து என்றும் பணிசைப் பாடிக்கொண்டிருக்கிற பேற்றினைப் பெற்றவர்.ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தளம் நட்டப்பாடை போன்ற இரண்டு இராகங்களைப் முதல் முதலாகப் படைத்து தென்னக இசைக்குத் தாயாக விளங்கும் காரைக்கால் அம்மையாரின் ஐக்கியப் பெருவிழாவை முன்னிட்டு இசைக்கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்கும் இசை ஆராதனை விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கோவில் தனிஅதிகாரி ஆசைத்தம்பி,கலைஞர்கள் மாமன்ற நிர்வாகிகள் தங்கவேல்,மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கு தகவல்இல்லை: காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா மூன்றாம் ஆண்டு நடைபெறுகிறது. இசை ஆராதனை காலை 8 மணி தொடங்கியது.மேலும் இதுப்போல் மாவட்ட நிர்வாக மூலம் நடக்கும் நிகழச்சியில் பொதுமக்கள் இல்லாததால் பல இருக்கைகள் காலியாக இருந்தது.மேலும் அம்மையார் கோவிலில் இதுப்போல் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை என் என்றால் சரியான விளம்பரம்இல்லை எனவே வரும் காலத்தில் இதுப்போல் ஒரு முக்கிய விழா என்றால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இசைக்கலைஞர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !