உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைச்சோறு எடுத்து பெண்கள் நூதன வழிபாடு

மழைச்சோறு எடுத்து பெண்கள் நூதன வழிபாடு

திருப்பூர்: மழை பெய்ய வேண்டிய, திருப்பூர் மாநகராட்சி, 11வது வார்டுக்கு உட்பட்டது சாமுண்டிபுரம், அம்சவிநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மக்கள், மழைச்சோறு எடுத்து, நூதன வழிபாடு நடத்தினர்.

பசுஞ்சாணத்தில் செய்த பிள்ளையாரை, சிறுமி தலையில் சுமந்தவாறு, வீடு வீடாக சென்று, பழைய சோறு யாசகம் பெற்றனர்.அதன்பின், அம்ச விநாயகர் கோவில் முன், வைத்து, பழைய சாதத்துடன், வெங்காயம், உப்பு கலந்து வைத்தனர். "மழை பொழிய வேண்டும், என்று, வருண பகவானை வேண்டி, கும்மி பாடல்களை பாடினர்.சிறுமியரும், பெண்களும், பழைய சாதம் சாப்பிட்டனர். "மழையில்லாத ஊரில் பிழைக்க முடியாது; ஊரை காலி செய்வதாக, விநாயகரிடம் கூறிவிட்டு பெண்கள் சென்றனர்.உடனே, மூதாட்டிகள் சிலர் ஓடிச்சென்று தடுத்து, "நிச்சயம் மழை வரும்; ஊருக்கு வாருங்கள் என்று வலியுறுத்த, பெண்கள் திரும்பினர்; அப்பகுதி பெண்கள் கூறுகையில்,""மழைச்சோறு எடுத்து சாப்பிட்டு, வழிப்பட்டால், மழை பெய்யும் என்பது நம்பிக்கை. கண்டிப்பாக மழை பொழியும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !