உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

ஸ்ரீபெரும்புதுார் : ஆதிகேசவப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான நேற்று, கருட சேவை உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ராமானுஜரின், 1,000மாவது ஆண்டு விழா ஏப்., 22 முதல் மே 1 வரை விமரிசையாக நடைபெற உள்ளது.இதற்கு முன்னதாக, ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழா, கடந்த, 12ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை, கருட சேவை, மாலை ஹனுமந்த வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் விதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !