செல்வ காளியம்மன் கோயில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :3101 days ago
காரியாபட்டி: காரியாபட்டி கெப்பிலிங்கம்பட்டியில் செல்வ காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. பொங்கல் வைத்தல், முளைப்பாரி கரைத்தல், சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.