உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னமலை காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

அன்னமலை காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மஞ்சூர்:அன்னமலை முருகன் கோவிலில் நேற்று நடந்த காவடி  பெருவிழாவில், திரளான பக்தர்கள் காவடி எடுத்தனர்.நீலகிரியின், பழநி என்றழைக்கப்படும் அன்னமலை முருகன் கோவிலில் நடப்பாண்டுக்கான, 28ம் ஆண்டு காவடி பெருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை நடந்தது.தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, கோவில் வளாகத்திலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, முருக பெருமான் அருள்பாலிக்க,காவடி ஊர்வலம் புறப்பட்டது.பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி ஏந்தியவாறு, ஆடல், பாடலுடன் வந்த பக்தர்களுக்கு, வழி எங்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களின் தாகத்தை தீர்க்க, கிராம மக்கள் சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டிருந்தது.
மஞ்சூரில் நடந்த காவடி ஊர்வலம், கீழ்குந்தா, மஞ்சூர், குந்தாமேல்கேம், மட்டக்கண்டி வழியாக, பகல், 3:00, மணிக்கு கோவில் வந்தடைந்து. தொடர்ந்து, பக்தர்களின் சிறப்பு பூஜை
மற்றும் ஆன்மிக சொற்பொழிவை அடுத்து, அன்னதானம் நிகழ்ச்சி  நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் ஸ்தாபகர், குரு  கிருஷ்ணாநந்தாஜி மற்றும் விழா குழுவினர் செய்தனர்.

* கூடலூர், பொன்னூரில் அமைந்துள்ள முருகன், கணபதி,  அம்பாள் கோவில், 10ம் ஆண்டு தேர் திருவிழா, 12ல் துவங்கியது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 10:30 மணிக்கு கொடி
ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, நாடுகாணி ஆற்றிலிருந்து, அம்மன் கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, பகல், 1:30 பற வை காவடி ஊர்வலம் துவங்கியது. இதில், பக்தர்கள்
காவடி எடுத்தும், வேல் பூட்டியும் பங்கேற்றனர். ஊர்வலத்தில், பக்தர் ஒருவர், 16 அடி நீளமுள்ள வேல் பூட்டி வந்த தும், மற்றொருவர் தன் முதுக்கில் கத்திகளை குத்தி ஊர்வலத்தில் பங்கேற்றதும் பரவசத்தில் ஆழ்த்தியது. இன்று, மாலை தேர் ஊர்வலம் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், தொடர்ந்து, நீர் வெட்டு நிகழ்ச்சி, அம்மன் கரக ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்க
உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !