பரமக்குடி ஈஸ்வரன் கோயில்சித்திரைத் திருவிழா:மே 7ல் திருக்கல்யாணம்
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 29ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. மே 7ல் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்
தேவஸ்தானத்தைச் சேர்ந்த,ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மே 28, இரவு 7:00 மணிக்கு சித்திரைத் திருவிழா அனுக்கை,
விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கும். மே 29ல் காலை 10:35 முதல் 11:15 மணிக்குள் கொடியேற்றமும், இரவு விநாயகர், முருகன், சந்திரசேகரர், விசாலாட்சி என பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கும்.தொடர்ந்து நந்தி, கிளி, குண்டோதரன், சிம்ம, அன்ன, ராவண
கைலாசம், காமதேனு, ரிஷபம், குதிரை வாகனங்களில் சுவாமி தினமும் வீதியுலா நடைபெறும். மே 6 ல் காலை அம்பாள் தபசு திருக்கோலம், மாலை மாற்றல் நடக்கும். மே 7ல் காலை 8:00 முதல் 9;15 மணிக்குள் விசாலாட்சி அம்பிகைக்கும்,சந்திரசேகர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.மே 8 ல் காலை 9:00 மணிக்கு சித்திரை தேரோட்டம், மறுநாள்
காலை தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.