உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளத்தூர் கிராமத்தில் கொடியேற்று விழா

கொளத்தூர் கிராமத்தில் கொடியேற்று விழா

மரக்காணம்: கொளத்தூர் கிராமத்தில் பழங்குடி மக்கள் விடுதலை இயக்க கொடி ஏற்று விழா நடந்தது. மரக்காணம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் நடந்த விழாவிற்கு மாநில தலைவர்
கன்னியப்பன் தலைமை தாங்கி, சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர் வரவேற்றார். சட்ட ஆலோசகர் லூர்துசேவியர், சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநில துணை தலை வர் வரதன், பொதுசெயலாளர் முத்துக்கண்ணன், தேசிய அமைப்பாளர் கிருஷ்ணன், பிரதிநிதிகள் குமார், பழனி, சண்முகம், வடிவேலு உட்பட பலர் கலந்து
கொண்டனர்.மாநில பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !