200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் சிலை திருட்டு
ADDED :3127 days ago
அரியலூர்: அரியலூர் அருகே, திருடு போன, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணாம்பிகை அம்மன் ஐம்பொன் சிலையை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், ஓட்டகோவில் கிராமத்தில் சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இரண்டரை அடி உயரமுடைய, 23 கிலோ எடையுள்ள சொர்ணாம்பிகை அம்மன் ஐம்பொன் சிலை இருந்தது. நேற்று காலை கோவிலுக்கு சென்ற,
குருக்கள், கோவிலின் உள்ளே இருந்த ஐம்பொன் சிலை மாயமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கோவிலின் பூட்டு உடைக்காமல், மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு பூட்டை திறந்து சிலையை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.