உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சி பிள்ளையார் பூஜை நிறைவு

உச்சி பிள்ளையார் பூஜை நிறைவு

அவிநாசி : அவிநாசி கோவிலில், மழை வேண்டி உச்சிப்பிள்ளையாருக்கு நடந்த சிறப்பு பூஜை நேற்று நிறைவடைந்தது.

அவிநாசியிலுள்ள ஸ்ரீ கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், நிலவு மேல் தூணில் உள்ள, உச்சிப்பிள்ளையாருக்கு தினமும், அபிஷேகம் செய்தால், மழை வரும் என ஐதீகம் உள்ளது. பருவ மழை ஏமாற்றிய நிலையில், கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், உச்சிப்பிள்ளையாருக்கு, 48 நாள் பூஜை நடத்த பக்தர்கள் திட்டமிட்டனர்.

இதற்காக, உச்சிப்பிள்ளையாருக்கு பூஜை செய்ய சாரம் அமைக்கப்பட்டு, தினமும் தீர்த்த அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. 24 நாட்கள் நடந்த பூஜை நேற்று நிறைவு பெற்றது. வரும், 29ல், சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் நடப்பதால், காப்பு கட்டும் பணிக்காக, உச்சி பிள்ளையார் பூஜை, நிறைவு பெற்றதாக, கோவில் சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !