உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் விளக்கு பூஜை

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் விளக்கு பூஜை

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற டிரஸ்ட்  சார்பில், 1008 விளக்கு பூஜை கோலாகலமாக நடந்தது. மகா கவி பாரதியாரின் ஆன்மிக குருவான சகோதரி நிவேதிதையின் 150வது  ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மாதர் மாநாடும், சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. பின், உலக நன்மைக்காவும்,  மழைவேண்டியும் சிறப்பு பூஜைகளை பெண்கள் செய்தனர். மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை நடந்தது. விவேகானந்தா கேந்திரத்தின்  திட்ட பொறுப்பாளர் ஐயப்பன் துவக்கி வைத்தார். டாக்டர் வித்யா பிரியதர்ஷனி, முன்னாள் தலைமையாசிரியர் பி.கே.மணி, சமஸ்தான  கோயில் பேஷ்கார் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் கேந்திர பொறுப்பாளர் நாகஜோதி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !