உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டியில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருகவும்  வேண்டி மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில்கூட்டு பிரார்த்தனை நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன்  தலைமை வகித்தார்.  ஆண்டிபட்டி வட்டார தலைவர் பாண்டியன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் மனோகரன், பிரசார குழு தலைவர்  தனுஷ்கோடி, சித்தர் பீட ஆன்மிக  பேச்சாளர் கந்தன் உட்பட ஏராளமானோர்  மேற்பட்டவர்கள் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.  பிரார்த்தனையின்போது மழை பெய்ததால் மகிழ்ந்தனர். நுாறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா  மற்றும் எழுதும் பொருட்கள் தரப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !