உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்

ஸ்ரீமுஷ்ணம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் அரசன் குட்டைத்தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த மாதம் 31 ந்தேதி காப்பு கட்டுதலோடு துவங்கியது.  19 நாட்கள் நடந்த விழாவில் அம்மன் பிறப்பு,  திருக்கல்யாணம், ராஜசூய யாகம், பகாசூரனுக்கு அன்னம் இடுதல், துகில் அளித்தல் உள்ளிட்ட உற்சவங்கள் நடந்து. தொடர்ந்து தினமும் இரவு பாரத பிரசங்கம், சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் சுவாமி வீதியுலா நடந்தது.  பின்னர் தீமிதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தீமித்து அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தினர் மற்றும் தட்டாரத்தெரு, அரசன் குட்டை தெரு,பொதுமக்கள், இளைஞர்கள்  செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !