உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சக்தி மாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

மகா சக்தி மாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் மகா சக்தி மாரியம்மன் செல்லியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலத்துடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் செல்லியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத தீமிதி திருவிழா முன் ஏற்பாடாக காப்பு கட்டும் பக்தர் 10 நாட்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கி தீமிதிப்பது வழக்கம். இந்தாண்டும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் பாரதம் படித்தல், காத்தவராயன் கதைப்பாட்டு, மோடி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து 7 ம் நாள் திருவிழாவாக பெண்கள் வெள்ளாற்றங்கரையிலிருந்து  108 பால்குடத்துடன் ஊர்வலமாக சென்று மூலவர் மகாசக்தி மாரியம்மன் செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மகா தீபாராதனையும், சாமி அலங்காரமும், சிறப்பு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !