உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கோயில்பட்டி தீச்சட்டி திருவிழா

கீழக்கோயில்பட்டி தீச்சட்டி திருவிழா

வத்தலக்குண்டு: கீழக்கோயில்பட்டி பகவதி அம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன்  செலுத்தினர். பகவதி அம்மன் பூஞ்சோலையிலிருந்து அழைத்து வரப்பட்டு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். தெருக்களில் ஊர்வலமாக  வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாவிளக்கு, பொங்கல், பால்குடம் எடுத்து, கிடா வெட்டப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள்  தீச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்கள் தொட்டில் கட்டி அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஏற்பாடுகளை  விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !