மழை வேண்டி பாதாள காளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
ADDED :3129 days ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பாதாள காளியம்மனுக்கு, மழை பெய்ய வேண்டி 108 பால்குட அபிேஷகம் நடந்தது. அதனையொட்டி, 18ம் தேதி காலை 8:00 மணிக்கு சி.என்.பாளையம் குயவர் வீதியில் உள்ள விநாயகர் கோவிலிருந்து 108 பால் குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பாதாள காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகள் நடுவீரப்பட்டு அறிவழகன் குருக்கள் தலைமையில் நடந்தது.