உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழிசை விழா நிறைவு

திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழிசை விழா நிறைவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவயோக சுவாமி நந்தனார் உலக இசை அறக்கட்டளை சார்பில் ஏப்.,14 முதல் நடந்த  சித்திரை தமிழிசை விழா நிறைவடைந்தது. தினமும் காலையில் சுப்பிரமணிய ஓதுவார், பொன். முத்துவிநாயகம், சிவபிரகாஷ், சண்முகம், அவினாசி ஓதுவார் குழுவினரின் திருமுறை இசையும், மாலையில் பாலாமணி ஈஸ்வர், மோகன சர்மா, சுவாதி ரங்கநாதர், சாய்ராம், சுதர்சன், காஷ்யப் மகேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நிறைவு விழாவில் கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் கனகவேல் முன்னிலை வகித்தார். கோயில் பேஷ்கார் மணிமாறன், மணியம் தனசேகரன், ஓதுவார்கள் சுப்பிரமணியன், முத்துவிநாயகம், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !