காரைக்கால் நித்திஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :3188 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்திஸ்வரம் பகுதியில் காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடந்தது. காரைக்கால் நித்திஸ்வரம் பகுதியில் உள்ள நித்தியக்கல்யாணி சமேத நித்திஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தேய்பிறையில் ஸ்ரீபைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது.முன்னதாக நித்திஸ்வரர்,ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.பின் பால்,சந்தனம் உள்ளிட்ட பலவகையான திரவங்களில் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.